தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதாக அறிவித்த உச்ச நீதிமன்றம், வரும் வெள்ளிக்கிழமை அன்று ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.