சென்னையை அடுத்த வேளச்சேரியில் இன்று அதிகாலை தாறுமாறாக ஓடிய கார், சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்தார். வேளச்சேரியில் இன்று அதிகாலை, குடித்துவிட்டு காரை எடுத்த நபர், காரை தாறுமாறாக ஓட்டியதில் சாலையோரம் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் ஏறியது. இதில், ஒரு கர்பிணிப் பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.