அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

காங்கிரஸ் – பாஜகவுக்கு மீண்டும் ஒரு சோதனை!

con logojpg

 

மகாராஷ்ட்ராவிலும், ஹரியானாவிலும்  சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவையும், பாரதிய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பையும் தந்த மாநிலங்கள் இவை. உள்ளூர் அரசியலையும் தாண்டி, நரேந்திர மோடியின் ஆட்சி மீதான மக்களின் மன நிலையை உணர்த்தும் தேர்தலாகவும் இது கருதப்படுவதால் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது.

BJP

தேர்தல் பிரச்சாரத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற இருக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதாலும், மகாராஷ்ட்ரா, ஹரியானா என இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் செல்வாக்கு மிக்க கட்சி என்பதாலும், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தத் தேர்தலாக இதனைக் கருதுகிறது பாரதிய ஜனதா. மகாராஷ்ட்ராவின் பந்தர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 2014ம் ஆண்டுதான் காங்கிரசுக்கு இறுதி ஆண்டு என்றும், அக்கட்சியின் சகாப்தம் முடியத் தொடங்கிவிட்டதாகவும் விமர்சித்தார்.

நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மகாராஷ்ட்ராவின் புல்தானாபூரில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்ட்ரா வளர்ச்சி பெறவில்லை என நரேந்திர மோடி பேசி வருவதில் உண்மை இல்லை என்றார். வளர்ச்சியில் குஜராத்தைவிட மகாராஷ்ட்ரா முன்னணியில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ் பாடுபடவில்லை என்ற நரேந்திர மோடியின் குற்றச்சாட்டையும் திட்டவட்டமாக மறுத்தார்.

ஹரியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ஜோதிர் ஆதித்ய சிந்தியா, காங்கிரசின் 10 ஆண்டுகால ஆட்சியில் இல்லாத அளவிற்கு கடந்த 3 மாதங்களாக பாகிஸ்தானின் ஊடுருவல் அதிகரித்திருப்பதாக குற்றம் சாட்டினார்.

மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவி உட்பட அதிகாரம் மிக்க எந்தப் பொறுப்பையும் ஏற்க மாட்டேன் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் 75 வயதை எட்ட உள்ளதாகவும், தனது 48 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், 25 ஆண்டுகள் அதிகாரமிக்க பதவிகளை வகித்து விட்டதாகவும் கூறினார். இனி வரும் காலங்களில் அரசியல் ஆலோசகராகவே இருக்க விரும்புவதாகவும் சரத் பவார் தெரிவித்தார்.

ஹரியானாவில் ஆளும் காங்கிரசுக்கு எதிராக பாரதிய ஜனதா மட்டுமல்லாது, ஓம் பிரகாஷ் சவுதாலா தலைமையிலான இந்திய தேசிய லோக் தளம் கட்சியும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதேபோல், மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, தேசிவாத காங்கிரஸ், சிவ சேனா என 4 முனைப் போட்டி நிலவி வருகிறது. இரு மாநிலங்களிலும் ஒரே கட்டமாக வரும் புதன் கிழமை நடத்தப்படும் தேர்தலின் முடிவுகள் வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியாக உள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s