அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், குழந்தை வளர்ப்பு, சமூகம்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனைகள்கூட இங்கே வழங்கப்படுவதில்லை: கைலாஷ் சத்யார்த்தி

Kailash_Satyarthi
2014ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றதன் மூலம் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றி உலகின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் சமூக செயல்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி. 1980 லிருந்து குழந்தைகளுக்கான இயக்கத்தில் செயல்பட்டுவருகிறார்.

‘குழந்தைகள் உரிமை தொடர்பான செயல்பாடுகளில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் எனக்கு. ஒருகட்டத்தில் இது ஒருவரால் மட்டுமே செய்யக்கூடிய பணியல்ல, என்பதை அறிந்து ஒத்த சிந்தனை உள்ளவர்களுடன் இணைந்து குழந்தைகளுக்கான பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த இயக்கத்தைத் தொடங்கினேன். ஆரம்பம் முதலே குழந்தை தொழிலாளர் பிரச்னை என்பது வெறுமனே தொழிற்நுட்பம் சார்ந்ததாகவோ சட்டம் சார்ந்ததாகவோ கருதாமல், அதை ஒரு சமூக பொருளாதார பிரச்னையாகப் பார்த்தேன். இது வெவ்வேறு பிரச்னைகளின் கூட்டு வடிவம். ஆழமான சமூக எதிரி. அதனால்தான் எங்களுடைய அமைப்பு தொண்டு நிறுவனமாக மட்டுமே இயங்கிவிடாமல் சமூக இயக்கமாகவும் வளரத் தொடங்கியது’ என்று தான் குழந்தைகளுக்கான அமைப்பு தொடங்கியது குறித்து பேசும் சத்யார்த்தி, இதுவரை 78, 500 குழந்தை கொத்தடிமை முறையிலிருந்து மீட்டிருக்கிறார்.

‘குழந்தைகள் கடத்தல் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலிருந்து டெல்லிக்கும் மும்பை, கொல்கத்தா போன்ற பெருநகரங்களுக்கு கடத்தப்படுகின்றனர். சில நூறு, ஆயிரம் என்றல்ல, லட்சக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். 50 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.பெருநகரங்களில் இவர்கள் குழந்தை தொழிலாளர்களாகவும் கொத்தடிமைகளாகவும் பாலியல் தொழிலாளிகளாகவும் பிச்சைக்காரர்களாகவும் தங்கள் பால்யத்தை தொலைக்கிறார்கள். பீகாரும் ஜார்க்கண்டும் குழந்தைகள் கடத்தலில் முன்னணியில் இருக்கும் மாநிலங்கள்!’ என்கிறார்.

Kailash Satyarthi

‘இந்தியாவில் குழந்தைகள் கடத்தலை தடுக்கும் கடுமையான சட்டங்கள் இல்லை. அதோடு மாநில அரசுகள் குழந்தைகள் கடத்தலை பொருட்படுத்துவதில்லை, மூடி மறைக்கவே பார்க்கின்றன. குழந்தை கடத்தல் மீட்பு நடவடிக்கைகளை எங்களைப் போன்ற அமைப்புகள் மேற்கொள்ளும்போது மட்டுமே இவர்கள் குழந்தை கடத்தல் நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்வார்கள். இருக்கும் குறைந்தபட்ச தண்டனைகள்கூட இங்கே நடைமுறைப்படுத்துவதில்லை. என்னைப் பொறுத்தவரை, அரசியல் சார்ந்த தன்முனைப்பு மட்டுமே குழந்தைகளுக்கு எதிரான இதுபோன்ற சமூக எதிரியை, குற்றத்தைத் தடுக்க சரியான வழிமுறையாக இருக்கும்!’ என்கிறார் வருத்தமும் எதிர்பார்ப்பும் கலந்த குரலில் கைலாஷ்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s