தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

TamilNadu Logo
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை தமிழக அரசு ஏழு சதவிகிதம் உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கு இணையாக, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியும் ஏழு சதவிகிதம் அதிகரிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த உயர்வின் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும், இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு, ரொக்கமாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்த்தப்பட்டதன் மூலம் தமிழக அரசுக்கு, ஆயிரத்து 558 கோடியே 97 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தமிழக முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s