சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சார்பில் நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சசிகலா, இளவரசி, சுதாகரன் உட்பட 3 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா உட்பட 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்ததை அடுத்து உடனடியாக அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.