சுற்றுச்சூழல், வானிலை

வங்கக் கடலில் புயல் சின்னம் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Rain
வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் செவ்வாய்க்கிழமை காலை உருவானது. இது போர்ட் பிளேருக்கு கிழக்காக 250 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின்னர் புயலாகவும் மாறும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அதேவேளையில் ஆந்திர மாநிலம் அருகில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில இடங்களில் மழை பெய்யும் என்றும்  தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் 80 மி.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசத்தில் 70 மி.மீ. மழையும், குமாரபாளையத்தில் 60 மி.மீ. மழையும் பெய்துள்ளது. மணிமுத்தாறு, விழுப்புரம் (50 மி.மீ.), பவானி, திருமங்கலம் (40 மி.மீ.), செய்யாறு, சங்ககிரி, செங்கம், அரக்கோணம், ராமநாதபுரம் (30 மி.மீ.), கிருஷ்ணகிரி, செஞ்சி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தனூர் அணை, பாம்பன், மேலூர், தருமபுரி, அரூர் (20 மி.மீ.), திருவண்ணாமலை, மதுரை, ஆம்பூர், பாலக்கோடு, விருதுநகர், பெருந்துறை, ஈரோடு, புதுச்சேரி, பேராவூரணி, ஆத்தூர், காஞ்சிபுரம் (10 மி.மீ.) ஆகிய இடங்களிலும் மழை பெய்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s