வணிகம்

நோக்கிய தொழிற்சாலையை மூடும் முடிவு: கேள்விக்குறியாகும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை

Nokia-logo-3330சென்னையிலுள்ள நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலையை நவம்பர் முதல் தேதியிலிருந்து மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்தின் உலகளாவிய செல்போன் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான சேவைகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு விற்பதாக கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. இந்த விற்பனை ஒப்பந்தம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நிறைவேறியது.

ஆனால், நோக்கியா நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறை தொடுத்திருந்த வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால், சென்னை அருகே அமைந்த நோக்கியா செல்போன் ஆலை மைக்ரோசாஃப்டுக்கு கைமாறவில்லை.இந்நிலையில், தமிழ்நாடு அரசு ரூ. 2,400 கோடி வரி இழப்பீடு கோரி வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அது தவிர, வருமான வரி தொடர்பான மற்றொரு வழக்கில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு சொத்துகளைக் கைமாற்றுவதற்கு முன்னர், நோக்கியா இந்தியா ரூ. 3,500 கோடிக்கான உத்தரவாதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இவ்வாண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இவை காரணமாக, சென்னை ஆலையானது, தொடர்ந்து நோக்கியாவின் வசமே இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஆலை தொடர்ந்து செயல்படும் விதத்தில் உற்பத்தியை மேற்கொள்ள மைக்ரோசாஃப்ட் உடன் ஒப்பந்தம் ஏற்பட்டது. அங்கு குறைந்த அளவில் உற்பத்தி நடைபெற்று வந்தது. அதே வேளையில், இவ்வருடம் ஏப்ரல் மாதம் ஆலை ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆலையை நவம்பர் மாதம் முதல் முற்றிலும் மூடப் போவதாக நோக்கியா இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

நோக்கியாவின் சென்னை ஆலையில் தயாரிப்பு மேற்கொள்ள ஏற்படுத்திய ஒப்பந்தம் நவம்பர் 1-ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கப்பட மாட்டாது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்திடமிருந்து பணி ஆணைகள் எதுவும் கிடைக்காத நிலையில், சென்னையருகே ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள ஆலையின் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க நோக்கியா முடிவு செய்திருக்கிறது.

வருமான வரி தொடர்பான வழக்கில், நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதால், நன்கு செயல்பட்டு வருகின்ற மின்னணு சாதனங்களின் உற்பத்தி வசதியை புதிய உரிமையாளருக்குக் கை மாற்றும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.ஆலையை மூடும் முடிரவை, அனைத்துத் தரப்பினருக்கும் தெரிவிக்க உள்ளோம். இந்த முடிவு எங்களது ஊழியர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து ஆராய்ந்து வருகிறோம். இது தொடர்பாக முடிவு எடுத்த பின்னர், அது குறித்து அறிவிப்போம் என்று அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த ஆலையில் 6,600 நிரந்தர ஊழியர்கள் பணிபுரிவதாகவும், அதில் சுமார் 5,000 பேர் விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s