அறிவியல், அறிவியல்/தொழிற்நுட்பம்

இயற்பியலுக்கான நோபல் அறிவிப்பு: மூன்று ஜப்பானியர் பகிர்கின்றனர்

நோபல் விருது 2014physics nobel
உலக வெப்பமயமாதலைத் தூண்டாத அளவுக்குக் குறைந்த அளவில் கரியமில வாயுவை வெளியிடும் எல்.ஈ.டி. விளக்குகளை உருவாக்கிய சாதனைக்காக, ஜப்பானைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் துறைக்கான இந்த ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இசாமு அகசாகி, ஹிரோஷி அமனோ, சுஜி நகமுரா ஆகிய ஆய்வாளர்கள் இந்தப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நோபல் பரிசு தேர்வுக் குழு அறிவித்தது. பரிசுத் தொகையான 11 லட்சம் டாலர்கள் அவர்கள் மூன்று பேருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

புதிய ஆற்றல் வாய்ந்த, சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பான ஒளியை வழங்கக்கூடிய நீல வண்ண ஒளியை உமிழும் எல்.ஈ.டி. விளக்குகளை இந்த மூன்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிப்புகளின் வரலாற்றில் இது மாபெரும் புரட்சியாகும். 20ஆம் நூற்றாண்டு காலத்தை தாமஸ் ஆல்வா எடிசன் வடிவமைத்த ஒளி விளக்குகள் ஒளிர்வித்தன; 21ஆம் நூற்றாண்டை இந்த எல்.ஈ.டி. விளக்குகள் ஒளிர்விக்க உள்ளன.

1990களின் துவக்கக் காலகட்டத்தில் குறைந்த மின் கடத்திகளைப் பயன்படுத்தி பிரகாசமான நீல வண்ண ஒளிக்கற்றைகளை இந்த மூன்று விஞ்ஞானிகளும் உருவாக்கியபோது, ஒளியூட்டும் தொழில்நுட்பத்தின் அடிப்படை தத்துவத்திலேயே முக்கிய பரிணாம வளர்ச்சியைத் தோற்றுவித்தது. விளக்குகளில் நெடுங்காலமாக சிவப்பு, பச்சை டயோடுகள் பயன்படுத்தப்பட்டதால் வெண்மை நிற வெளிச்சத்தை ஏற்படுத்த முடியாமல் இருந்த நிலையை, அவர்களது நீல வண்ண ஒளிக்கற்றைகள் மாற்றின. 30 ஆண்டுகால கடும் முயற்சிக்குப் பின் நீல வண்ணம் மிளிரும் டயோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வகை எல்.ஈ.டி. விளக்குகள் நீண்டகாலம் உழைக்கக் கூடியவையும், பழைய ஒளிவிளக்குகளைக் காட்டிலும் கூடுதல் ஆற்றல் படைத்தவையும் ஆகும். குறைந்த மின் சக்தியில் வெண்ணிற ஒளியைப் பாய்ச்சக்கூடிய எல்.ஈ.டி. விளக்குகள் சூரிய வெப்ப ஆற்றலால் இயங்கும் தன்மை படைத்தவை. இதனால், உலக அளவில் மின் கம்பிகள் அமைக்க முடியாத தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 150 கோடி மக்களுக்கு வரப்பிரசாதமாக அவை விளங்கும் என்று நோபல் பரிசு தேர்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.

AMANO, Hiroshi , Professor
ஹிரோஷி அமானோ

 

ஹிரோஷி அமானோ

ஜப்பானின் ஹமாமாட்சூ நகரில் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்தவர் ஹிரோஷி அமானோ, 1983-இல் மின்னணுப் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். 1988-இல் நகோயா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஜப்பானின் மெய்ஜோ, நகோயா பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். குறைமின் கடத்திகள், சூரிய ஒளி சேமிப்புக் கலன்கள், ஒளி உமிழும் டயோடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் நிபுணத்துவம் பெற்றவர். மின்னணுவியல் ஆராய்ச்சிகளில் அவரது குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக ஜப்பான், பிரிட்டன் ஆகிய நாடுகளின் முக்கிய விருதுகளைப் பெற்றவர்.

shuji-nakamura-400x266
சுஜி நகமுரா

 

சுஜி நகமுரா

அமெரிக்கவாழ் ஜப்பானியரான சுஜி நகமுரா(60) ஜப்பானின் இகாடா நகரில் 1954ஆம் ஆண்டு மே 22-இல் பிறந்தார். டோகுஷிமா பல்கலைக்கழகத்தில் பொறியியில் பட்டப்படிப்பை முடித்தார். தற்போது, அமெரிக்காவின் சான்டா பார்பரா நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். நீல வண்ணம் உமிழும் டயோடு கண்டுபிடிப்பில் முக்கியப் பங்களிப்பைத் தந்தவர். அமெரிக்காவின் பெருமைக்குரிய பெஞ்சமின் பிராங்க்ளின் விருது உள்பட பல்வேறு உயரிய விருதுகளைப் பெற்றவர்.

 

prof-akasaki-thumb-autox240-162
இசமு அகசாகி

இசமு அகசாகி

ஜப்பானின் காகோஷிமா நகரில் 1929ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி பிறந்தவர் இசமு அகசாகி (85), அந்நாட்டின் பிரபல மெய்ஜோ, நகோயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆவார். 1952-இல் கியோடோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். 1964-இல் மின்னணுப் பொறியியல் ஆராய்ச்சிக்கான முனைவர் பட்டத்தை நகோயா பல்கலைக்கழகம் இவருக்கு வழங்கியது. 1989ஆம் ஆண்டில் காலியம் நைட்ரைடு வேதிப் பொருளைப் பயன்படுத்தி நீல வண்ணம் உமிழும் எல்.ஈ.டி. விளக்கைக் கண்டுபிடித்ததன்மூலம் பிரபலம் அடைந்தார். அதைத் தொடர்ந்து, பெருமைக்குரிய கியோடோ விருது, சர்வதேச மின் மற்றும் மின்னணுப் பொறியியல் தொழில்நுட்பத்துக்கான எடிசன் பதக்கம் ஆகியவற்றைப் பெற்றவர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.