அரசியல், தமிழ்நாடு

பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் வேடிக்கை பார்க்கமாட்டேன்: விஜயகாந்த் காட்டம்

vijayakanthபக்ரீத் பண்டிகையொட்டி, தேமுதிக சார்பில் இஸ்லாமியர்களுக்கு குர்பானி வழங்கும் நிகழ்ச்சி, கோயம்பேட்டில் உள்ள அக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் இணைந்து குர்பானி வழங்கினார். பின்னர்  பேசிய விஜயகாந்த், ‘முல்லைப் பெரியாறு பிரச்னை, காவிரிப் பிரச்னை போன்றவற்றில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைப் பாராட்டியதுடன், அதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்று ஆளும்கட்சியினர் பாராட்டு விழா நடத்தினர். இப்போது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்ப்பது ஏன்? பொதுச் சொத்துகளுக்குப் பெரிய அளவில் சேதம் விளைக்கப்படுகின்றன. இதை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அதிமுகவினர் புதிதாகப் பதவியேற்றபோது, அழுதுகொண்டே பதவியேற்றுக் கொண்டனர். உண்மையில், ஜெயலலிதா மீது அக்கறை இருந்தால், அவர் இல்லாத அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்று அதிமுகவினர் விலகி இருந்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் போகக் கூடாது என்பதற்காகவே பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு முன்பு போடப்பட்டிருந்தது. தற்போது, தமிழகம் முழுவதும் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அரசு தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்காதது ஏன் என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s