சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் மீது இன்று விசாரணை நடைபெற உள்ள நிலையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, நீதிமன்றம் தொடங்கியவுடன் அவசரம் கருதி இந்த வழக்கை முதல் வழக்காக விசாரிக்க நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு மறுத்த நீதிபதி சந்திரசேகர் வரிசைப்படிதான் மனுவை விசாரிக்க முடியும் என்றார். ஜெ ஜாமீன் மனு 73வது மனுவாக உள்ளது.