அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

ஜெயலலிதாவுக்கு ஆதரவான போராட்டங்கள்: கருணாநிதி கடும் கண்டனம்

Karunanidhi
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக அதிமுகவினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

அ.தி.மு.க. வின் பொதுச் செயலாளர், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து தமிழகத்தில் அன்றாடம் ஒவ்வொரு பகுதியிலும் உண்ணாவிரதப் போராட்டம் என்றும், ஆர்ப்பாட்டம் என்றும், மனிதச் சங்கிலி என்றும் போட்டிப் போட்டுக் கொண்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக் கூடிய அளவில் முறைப்படி காவல் துறையினரின் அனுமதியைக் கூடப் பெறாமல் நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் – மிரட்டலை அடுத்துப் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தனியார் பேருந்துகள் – ஆம்னிப் பேருந்துகள் உரிமையாளர்களும், திரைப்படத் துறையினரும், கிரானைட் குவாரி உரிமையாளர்களும், வணிகர்கள் சார்பிலும் இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு அவர்களும் ஒரு நாள் முழுவதும் வேலை நிறுத்தமோ உண்ணாவிரதமோ இருந்து வருகிறார்கள்.

குறிப்பாக மாணவர்களின் படிப்பைப் பாதிக்கின்ற அளவுக்கு தனியார் பள்ளிகள் நாளைய தினம் இயங்காது என்று அறிவித்திருப்பதையும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவ மாணவியரும் சிறிதும் விரும்பவில்லை என்பதால் இத்தகைய கிளர்ச்சிகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். அரசின் நிர்வாகப் பொறுப்பிலே இருப்பவர்களும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எள்ளளவும் ஆதரிக்காமல், இவற்றைத் தடுத்து நடுநிலையாளர்கள் அனைவரும் நினைப்பதைப் போல தமிழக நிர்வாகம் ஸ்தம்பித்து விடவில்லை என்று நிரூபித்திடும் முயற்சியில் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s