அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் இணைய வணிகத்தில் குறைந்தது 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அன்டல் இன்டர்நேஷனல் நெட்வொர்க் நிறுவனத்தின் இந்தியக் கிளை மேலாண் இயக்குனர் ஜோசப் தேவேஷியா தெரிவித்துள்ளார். அடுத்த 3 ஆண்டுகளில் 25 சதவிகித வளர்ச்சி ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இத்துறை கிட்டத்தட்ட 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக உள்ளது எனவும், 2016ம் ஆண்டு வாக்கில், இது 50 ஆயிரம் கோடி ரூபாய் என அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. திறமையானவர்களை வேலைக்கு ஈர்க்க, இத்துறைப் பணிகளுக்கான சம்பளம் அதிகரித்துள்ளதுடன், ஈசாப் எனப்படும் ஊழியர்களுக்கு நிறுவனப் பங்குகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கவும் பல நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.