

மம்மூட்டி மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் மணிரத்னம். படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 6ம் தேதி முதல் தொடங்குகிறது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதி செய்கிறார் பி.சி.ஸ்ரீராம். இப்படத்தை 3 மாதங்களுக்குள் முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட முடிவு செய்துள்ளார் மணிரத்னம். முன்னதாக மணிரத்னம் படத்தில் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடிப்பதாக இருந்தது. இதுபற்றி ராம்சரண் வருத்ததுடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.