அரசியல், இந்தியா

பிரசார் பாரதியா? ஆர்.எஸ்.எஸ். சாரதியா? சர்ச்சையை கிளப்பிய நேரலை ஒளிபரப்பு!

AIR

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தின் பேச்சு தூர்தர்ஷனில் ஒரு மணி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதற்கு காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
“தூர்தர்ஷன் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்துவதையே இது காட்டுகிறது. நமது அனைத்து தேசிய விருப்பங்களுக்கும் மேலாக ஆர்எஸ்எஸ் கூறுவதை ஏற்க முடியாது. இது தடுக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

“ஹிந்துத்துவா சித்தாந்தங்களைப் பிரசாரம் செய்ய பொது நிகழ்ச்சிகளை ஆர்எஸ்எஸ் பயன்படுத்துகிறது. ஆர்எஸ்எஸ் போன்ற இயக்கத்தின் தலைவரது பேச்சை அரசு பொது நிறுவனமான தூர்தர்ஷன் நேரலையாக ஒளிபரப்ப வேண்டிய அவசியமில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊதுகுழலாக இருப்பதற்கு தூர்தர்ஷனை அனுமதித்தது குறித்து மத்திய அரசு, குறிப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சம் விளக்கமளிக்க வேண்டும்’ என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கூறினார்.

வரலாற்று ஆய்வாளரும், விமர்சகருமான ராமச்சந்திர குஹா, “ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஒரு குழுவாத இந்து இயக்கமாகும். மோகன் பாகவத்தின் பேச்சை நேரலையாக ஒளிபரப்பியது, அரசு இயந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை எடுத்துக் காட்டுகிறது. இது ஆபத்தானதாகும்’ என்றார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சந்தீப் தீட்சித், “ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊதுகுழலாக தூர்தர்ஷன் இருக்கக் கூடாது. தூர்தர்ஷனில் மோகன் பாகவத்தின் உரை நேரலையாக ஒரு மணிநேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டதன் மூலம் ஓர் ஆபத்தான மரபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் சர்ச்சைக்குரிய அமைப்பாகும். பாகவத்தின் பேச்சை ஒளிபரப்பிய நடவடிக்கை அரசியல் ரீதியானது’ என்றார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் உரையை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது தொடர்பாக பிரசார் பாரதி அமைப்பு சொந்தமாக முடிவெடுக்கிறது. அப்படி இருக்கும்போது, செய்தி முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியான ஆர்எஸ்எஸ் தலைவரின் உரையை தூர்தர்ஷன் ஒளிபரப்பியதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படுவது ஏன்? இந்த நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பியுள்ளன. எனவே இதை தூர்தர்ஷன் ஏன் காட்டக் கூடாது?

ஆர்எஸ்எஸ் தலைவரின் உரையை, முந்தயை ஆட்சியாளர்கள் விதித்த கட்டுப்பாடு காரணமாக கடந்த காலங்களில் தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பாமல் இருந்திருக்கலாம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களது உரைகளை “தூர்தர்ஷன் நியூஸ்’ தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. அப்போது அது குறித்து யாரும் பேசுவதில்லை என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

இதனிடையே, “இதர செய்திகளைப் போன்றுதான் மோகன் பாகவத் பங்கேற்ற செய்தியும் ஒளிபரப்பப்பட்டது’ என்று தூர்தர்ஷன் தலைமை இயக்குநர் அர்ச்சனா தத்தா விளக்கமளித்துள்ளார்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.