அரசியல், இந்தியா

முறையாக கணக்கு காட்டாத நிதி : தமிழகத்தைச் சேர்ந்த 1108 அமைப்புகளுக்கு நோட்டீஸ்

Govt of India logoஇந்தியாவில் உள்ள அமைப்புகள், சங்கங்கள் ஆகியவை வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி, நன்கொடை போன்றவற்றை முறைப்படுத்த “வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம்’ 2010-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்படி வெளிநாட்டில் நிதி பெறும் அமைப்புகள் முறைப்படி மத்திய உள்துறையிடம் ஒழுங்குமுறைச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
இந்த அமைப்புகளுக்கு வரும் நிதி, அதை வழங்குவோர் தொடர்பான விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டினர் துறையின் வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டக் குழு கண்காணிக்கும். மேலும், வெளிநாட்டில் இருந்து வரும் நிதி, நன்கொடை தொடர்பான ஆண்டறிக்கையை நிதிவாங்கும் அமைப்புகள் உள்துறையிடம் கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், இதைப் பின்பற்றாமல் 2009-10, 2010-11, 2011-12 ஆகிய நிதியாண்டுக்கான அறிக்கையை இதுவரை 10,300 அமைப்புகள் தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, அந்த அமைப்புகளுக்கும் மத்திய உள்துறை புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், “வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறும் வகையில் ஆண்டறிக்கையை தாக்கல் செய்யாததால் உங்கள் அமைப்புக்கு அரசு அளித்த பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது?’ என்று கூறப்பட்டுள்ளது. அரசு சாரா நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், பெண்கள் அமைப்புகள், அறக்கட்டளைகள், முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள், சமூக மேம்பாட்டு அமைப்புகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். தமிழகத்தில் உள்ள 1,108 அமைப்புகள் இதில் இடம் பெற்றுள்ளன.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.