நடப்பாண்டு இயற்பியல் துறை நோபல் பரிசுக்கான பட்டியலில், அமெரிக்காவில் வசிக்கும், தமிழகத்தைச் சேர்ந்த இயற்பியலாளரான ராமமூர்த்தி ரமேஷின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இயற்பியல் துறையில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கான, நோபல் பரிசு வரும் செவ்வாய் கிழமை அறிவிக்கப்பட உள்ள நிலையில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், இந்த பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா, மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் ராமமூர்த்தி ரமேஷ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜேம்ஸ் காட், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் யொஷினோரி டோகுரா உள்ளிட்டோரின் பெயர்களையும், இயற்பியல் துறைக்கான, நோபல் பரிசு பரிந்துரைப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன. பெங்களூர் ஐ.ஐ.டி.யில் படித்த ராமமூர்த்தி சென்னையைச் சேர்ந்தவராவார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் முனைவர் பட்டம் மேற்கொண்டுள்ள ரமேஷ், சிக்கலான ஆக்ஸைடுகள் குறித்த ஆராய்ச்சிற்காக, நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.