ஜாதியக் கொடைமை ஒரு முதல்வருக்கே நிகழ்த்தட்டுள்ள நிலையில சாதாரண மக்கள் கிராமப்புறங்களில் எத்தகைய ஜாதியக் கொடுமைகளுக்கு உள்ளாவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கயில், பிகார் மாநில முதல்வர் ஜிதன் ராம் மாஞ்ஜி தனக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை தொடர்பாகக் கூறியுள்ளார். அண்மையில், நடைபெற்ற இடைத்தேர்தலின்போது மதுபானி மாவட்டத்தில் அவர் ஒரு கோயிலுக்குச் சென்றதாகவும், கோயிலை விட்டு அவர் வெளியேறிய பின்னர், அந்த கோயில் நிர்வாகத்தினர் கோயிலைக் கழுவி சுத்தம் செய்ததாகவும் கூறியுள்ளார். ஒரு முதல்வருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்கள் கிராமப்புறங்களில் எத்தகைய ஜாதியக் கொடுமைகளுக்கு உள்ளாவார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். எனவே மத்திய, மாநில அரசுகள் பிகார் மாநில முதல்வருக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமையைக் கவனத்தில் கொண்டு, தீண்டாமைக்கு எதிரான தேசிய இயக்கத்தை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். பிகார் முதல்வருக்கு எதிராக தீண்டாமைப் போக்கைக் கடைப்பிடித்த ஜாதியவாதிகளைக் கண்டிக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.