
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு. ஜெயலலிதாவை விடுவிக்க எதிப்பது ஏன என விளக்கி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி ரத்னகலா ஜாமீன் மனு விசாரணை அக்டோபர் 7ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். தசரா விடுமுறை முடிந்து வழக்கான அமர்வு இந்த மனு விசாரணையை மேற்கொள்ளும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.