இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், சமூகம், பெண், பெண்ணியம்

கர்நாடக கோயிலில் தலித் பெண்கள் அர்ச்சகர்களாக நியமனம்

Lakshmi

கர்நாடக மாநிலத்தின் மங்களூருவிலுள்ள குத்ரோலி ஸ்ரீ கோகர்ண நாதேஸ்வரர் கோயிலில் கணவனை இழந்த தலித் பெண்கள் இருவர் அர்ச்சகர்களாக திங்கள்கிழமை நியமிக்கப்பட்டனர். நூறாண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோயிலில், கணவனை இழந்த எஸ்சி-எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த சந்திராவதியும், லட்சுமியும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நுழைவு வாயிலில் வந்து வரவேற்ற கோயில் நிர்வாகத்தினர், பின்னர் கோயில் கருவறைக்குள் அழைத்துச் சென்றனர்.  பின்னர் இந்த 2 பெண்களும் பூஜைகள் நடத்தியதுடன், பிரசாதங்களும் வழங்கினர். முன்னதாக, இதேபோன்று கடந்த ஆண்டு கணவனை இழந்த 2 பெண்களை அர்ச்சகர்களாக இந்தக் கோயில் நிர்வாகத்தினர் நியமித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தைச் சேர்ந்த துறவியும் சமூக சீர்திருத்தவாதியுமான நாராயண குருவால் 1912ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்தக் கோயில்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s