வீட்டுக்குத் தேவையானப் பொருட்கள் தயாரிப்பதற்கான எளிய தையல் முறைகள் பற்றி பார்த்து வருகிறோம். இந்த வரிசையில் தலையணைகள் உருவாக்குவதைப் பார்ப்போம். கடைகளில் விற்கும் தலையணைகளைப் போல அதே நேர்த்தியோடு,குறைந்த செலவில் தலையணைகளை உருவாக்க முடியும்.
தேவையானவை:
பஞ்சு (பஞ்சு பொம்மைகள் செய்யத் தேவையான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். தூய்மையான பருத்தி பஞ்சு தலையணை வேண்டும் என்று நினைப்பவர்கள். பருத்தி பஞ்சை காதி கடைகளில் வாங்கியும் தலையணை தைக்கலாம்.)
மெல்லிய பருத்தி துணி (நாங்கள் பயன்படுத்தியிருப்பது வீட்டில் பயன்படாமல் இருந்த காட்டன் புடவையை, இது சில முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது)
நூல் (துணியின் நிறத்துக்கு ஏற்ப தையல் நூல்)
கத்தரிகோல்
தலையணையின் அளவுக்கு ஏற்றபடி(அளவு எடுக்க பழைய தலையணைகளை பயன்படுத்தலாம்) கூடுதலாக மூன்று பக்கமும் ஒரு இன்ச் (தையல் போட) அதிகமாக விட்டு வெட்டிக் கொள்ளவும். தையல் போட வேண்டிய இடங்களில் ஒரு சாக் கட்டியால் கோடுகள் வரையவும்.
தையல் போடும்போது உள்பக்கம் மடித்து தையல் போடவேண்டும்.
உள்பக்கம் மடித்து இதேபோல் இரண்டு பக்கமும் தைக்க வேண்டும்.
மூன்றாவது பக்கம் பாதி மட்டும் தைத்து பாதியை தைக்காமல் விடுங்கள். இதன் வழியாகத்தான் பஞ்சு நிரப்பப் போகிறோம்…
தைக்காமல் விட்ட பகுதி வழியாக தைத்த துணியை திருப்பிப் போடுங்கள். இதோ இப்படி கிடைக்கும்…
தைக்காமல் விட்ட பகுதி வழியாக பஞ்சை நிரப்புங்கள்.
குழிகள் விழாதபடி தலையணை முழுக்க ஒரே அளவில் பஞ்சு நிரப்புங்கள்.
தைக்காமல் விட்ட பகுதியை இப்போது உள்பக்கமாக மடித்து தையல்போடுங்கள். தையல்போடும் பகுதியில் உள்ள பஞ்சை உள்ளே அழுத்தமாக திணித்தால் தையல் போட அவசதியான இடைவெளி கிடைக்கும்.
தையல்போட்டு முடித்ததும் தலையணை பயன்பாட்டுக்கு தயார்.
தலையணைக்கு உங்கள் விருப்பமான உறை போட்டு நீங்களே தயாரித்த தலையணைகளைப் பயன்படுத்துங்கள்.