முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பால் அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்காது என்று அரசியல் விமர்சகர் சோ தெரிவித்துள்ளார்.சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதித்துள்ளதாக பரவலான கருத்து வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் 4 வருட சிறை தண்டனை உண்மையில் அவருக்கு பெரும் பின்னடைவுதான். இதற்காக அவரை அரசியலில் இருந்து முழுமையாக ஒதுக்கிவிட முடியாது. ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாக சிலர் எதையோ நினைத்து எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சிக்கலில் இருந்து மீண்டுவர ஏராளமான சட்டவழிகள் உள்ளன. எனவே அவர் மீண்டு வருவார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையின் தன்மை தமிழக மக்களிடம் அவர்மீது பெரியளவில் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளதுதான் உண்மை. இதுவரை இப்படியொரு அனுதாபம் யாருக்கும் கிடைத்ததே இல்லை. ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவு நிச்சயமாக அவருக்கு பாதிப்பு இல்லை. தமிழகத்துக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும். இது கடந்த திமுக ஆட்சியில் நடந்த அரசியல் நிகழ்வுகளை கருத்தில் கொண்டால் புரியும் என்று தெரிவித்தார்.
சிறந்த பதிவு
தொடருங்கள்