சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து விஷாலுடன் திமிரு, வசந்தபாலனின் வெயில்,பிரியதர்ஷனின் காஞ்சீவரம் படங்களில் நடித்தவர் ஷ்ரியா ரெட்டி. நடிகர் விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்துகொண்ட ஷ்ரியா தன் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஆலோசகராக இருந்தார். தற்சமயம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அண்டாவைக் காணோம் என்ற படத்தின் மூலம் நடிக்க வந்திருக்கிறார். கிராமத்தில் நடக்கும் கதையில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அளித்த பேட்டியில் கதை காரணமாகவே நடிக்க ஒப்புக் கொண்டதாக சொல்கிறார் ஷ்ரியா. JSK ஃபிலிம் கார்ப்பொரேஷன் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படத்தை புதுமுக இயக்குநர் வடிவேல் இயக்குகிறார்.