அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

புதிய மின்கட்டண உயர்வு: யாருக்கு எவ்வளவு பாதிப்பு?

Tangedgoதமிழ்நாட்டில் ரூ.6805 கோடி ரூபாய்க்கு மின்கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பொது அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அறிவிப்பின் படி வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் 15 விழுக்காடு அளவுக்கு உயருகிறது. குறைந்த அழுத்த மின்சாரம் பயன்படுத்தும் வர்த்தக நிறுவனங்களுக்கும் 15 விழுக்காடும், உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்தப்படும் தொழிற்சாலைகளுக்கு 30 விழுக்காடு கட்டணமும் உயர்த்தப்படுகிறது.

அதேபோல், வீட்டு உபயோகத்திற்கு 500 யூனிட் வரை ரூபாய் 2,000 மின் கட்டணமாக செலுத்தியவர்கள், மேலும் 300 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோர் ரூ.5.75 இல் இருந்து ரூ.6.60 என்று ஒரு யூனிட்டுக்கு 85 பைசா கூடுதலாக செலுத்த வேண்டும்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்தியது.மக்களைப் பாதிக்கக் கூடாது என்பதற்காக மானியம் அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அரசின் மானியம் 500 யூனிட் வரை உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். தற்போது வீட்டு உபயோகங்களில் மின் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், நகர்புறங்களில் இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் தேவைப்படுகிறது. இந்த மின் கட்டண உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s