அரசியல், தமிழ்நாடு

தமிழக உளவுத் துறை ஐ.ஜி. உள்பட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

TamilNadu Logoதமிழக காவல் துறையின் உளவுத் துறை ஐ.ஜி. உள்பட 9 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ள உத்தரவு (பழைய பதவி அடைப்புக் குறிக்குள்):

அம்ரேஷ் பூஜாரி: தமிழ்நாடு போலீஸ் அகாதெமி ஐ.ஜி. (உளவுத் துறை ஐ.ஜி.)

பி.கண்ணப்பன்: உளவுத் துறை ஐ.ஜி. (தமிழக காவல் துறையின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு ஐ.ஜி.)

ஜெ.லோகநாதன்: தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (திருநெல்வேலி நகர இணைக் காவல் கண்காணிப்பாளர்)

வி.விக்கிரமன்: விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (கமுதி இணைக் காவல் கண்காணிப்பாளர்)

எஸ். மனோகரன்: சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் (விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்)

சரோஜ்குமார் தாகூர்: திருச்சி நகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் (சேலம் இணைக் காவல் கண்காணிப்பாளர்)

அபிநவ்குமார்: நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (திருச்சி நகர துணை ஆணையர்)

ஆர்.பொன்னி: பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 13-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் (நாகப்பட்டினம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்)

எஸ்.மணி: சமூக நீதி, மனித உரிமை ஏ.ஐ.ஜி. (பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 13-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட்)

பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளில் லோகநாதன், விக்கிரமன், சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் இணைக் காவல் காவல் கண்காணிப்பாளர்களாக இருந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளனர். தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த அஸ்ரா கர்க் பயிற்சிக்கு நீண்ட விடுப்பில் செல்வதால், அந்தப் பணியிடத்துக்கு புதிய காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நீதி, மனித உரிமை ஏ.ஐ.ஜி. யாக பணியிட மாற்றம் செய்யப்பட்ட எஸ். மணி, ஏற்கெனவே உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுப் பிரிவில் நீடிப்பார் என தமிழக அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s