சினிமா

பிரமாண்டமான நிகழ்ச்சிகளில் நம்பிக்கையில்லை: ஐ விழாவில் கலந்துகொள்ளாதது பற்றி ஒரு நடிகர் இப்படி சொல்கிறார்!

suresh-gopi-malayalam-actor-732098

‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 15ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் பிரம்மாண்டமாக நடந்தது.  ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்,  ரஜினிகாந்த் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்.  ஐ படத்தில் வில்லன்களாக நடித்துள்ள மலையாள முன்னணி நடிகர் சுரேஷ் கோபி,  நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார் ஆகியோர் இசை விழாவில் கலந்து கொள்ளவில்லை.  படத்தின் படப்பிடிப்பில் சுரேஷ் கோபி, ராம்குமார் உள்ளிட்டோர் சரியான ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றும், அதனால்தான் விழாவிற்கு அவர்கள் அழைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் அந்த விழாவில் கலந்து கொள்ளாதது குறித்து சுரேஷ் கோபி விளக்கம் அளித்துள்ளார். “மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை என படத்தின் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கெனவே தகவல் தெரிவித்துவிட்டேன். இந்த மாதிரியான பெரும் தொகை செலவு செய்யப்படும் விழாக்களில் கலந்து கொள்வதில் எனக்கு நம்பிக்கையில்லை. ஆனால், ‘ஐ’ படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நிச்சயம் கலந்து கொள்வேன்,” எனவும் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.