அரசியல், இந்தியா

படுத்த படிக்கையாக இருக்கும் அப்பாவைப் பார்க்க பரோல் கேட்டு நளினி மனு: சட்ட ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்றம் தள்ளுபடி

S-Naliniமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நளினி உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், நான் ஆயுள் சிறை தண்டனைக் கைதியாக 22 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளேன். என்னுடைய தந்தை பி.சங்கர நாராயணன் (90). அவர் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர். தற்போது திருநெல்வேலி மாவட்டம், அம்பலவானபுரத்தில் படுத்த படுக்கையாக, மிகவும் மோசமான நிலையில் உள்ளார். நான் அவரைச் சந்தித்து 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவரது இறுதிக் காலத்தில் நான் அவருடன் சில நாள்கள் இருப்பதற்கு ஆசைப்படுகிறேன். கடந்த 22 ஆண்டுகளில் எனக்கு மூன்று நாள்கள் மட்டுமே பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   எனவே, இறுதி நாள்களை எண்ணிக் கொண்டிருக்கும் எனது தந்தையைச் சந்திப்பதற்கு ஒரு மாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் பரோலில் செல்ல அனுமதி வழங்கினால் சட்டம்-ஒழங்கு பிரச்னை ஏற்படும் என போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை (செப். 22) மீண்டும் வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s