பான் கார்டு விண்ணப்பிப்பது முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வரை வரி தொடர்பான எல்லா வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இணைய தளத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று தொடங்கி வைக்கிறார்.ஒற்றைச் சாளர முறை எனப்படும் ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் பெறக்கூடியதாக இந்த இணைய தளம் செயல்படும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. www.incometaxindia.gov.in என்ற ஏற்கனவே உள்ள இணையதளம் இதற்கென மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் வருமான வரித் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இணைய தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.