பண்டிகை மற்றும் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கு ஏற்றவகையில் ஒரு மாதமாகவே தங்கம் விலை குறைந்து வருகிறது. தற்போது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.2,499க்கும், ஒரு சவரன் விலை ரூ.19,992 என்ற அளவுக்கும் குறைந்தது. 24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.26,730க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.41.40க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.38,650க்கும் விற்பனை செய்யப்படுகிறது.