வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் வளர்ப்பது, இயற்கை பூச்சி கொல்லி மருந்துகள் தயாரிப்பது எப்படி என்று ஆலோசனை சொல்கிறார் தமிழ்நாடு வேளாண் பயிற்சி மைய உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம்….
மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ‘வீட்டுத் தோட்டம் அமைத்தல்’ பற்றிய ஒரு நாள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர், மாணவர்கள், சுய உதவிக் குழுக்கள், இளைஞர்கள் மற்றும் வீட்டுத் தோட்டம் அமைக்க விரும்பும் அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இப்பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபெசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சி நாள்: 24-9-2014
பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
பயிற்சி கட்டணம் : ரூ. 400. மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ. 300ம் மாணவர்களுக்கும் ரூ.200ம் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது. பயிற்சி பற்றிய கையெடுடன் குறிப்பேடும் மதிய உணவும் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
தொடர்பு முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தகவல் மற்றும் பயிற்சி மையம்
எண்: U-30 10வது தெரு (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்)
அண்ணாநகர்
சென்னை – 600 040.
தொலைபெசி எண் – 044-26263484
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்