இசை கலைஞர்கள், சினிமா

பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் 45 வயதில் மரணம்!

Srinivas_2009

குழந்தை மேதையாக கொண்டாடப்பட்ட மாண்டலின் ஸ்ரீனிவாசன் தன்னுடைய 45 வயதில் காலமானார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில்  கல்லீரல் பிரச்னை காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாசன் இன்று காலை 9.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 45. ஸ்ரீனிவாசன் 1994-ம் மே 27-ல் ஆந்திராவைச் சேர்ந்த யுவஸ்ரீயை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

1969ஆம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி, ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பிறந்தவர் ஸ்ரீநிவாசன். இவரது தந்தை சத்யநாராயணன் மாண்டலின் இசைக் கலைஞராவார். அவரிடம் இசைக் கருவியை இசைக்கக் கற்று மிக சிறந்த கலைஞராக விளங்கினார். இவரது சகோதரர் யு. ராஜேஷும் சிறந்த இசைக் கலைஞராவார். மாண்டலின் வாத்தியக் கருவியை இசைப்பதில்  நிபுணத்துவம் பெற்று விளங்கிய ஸ்ரீநிவாசன், பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா, சங்கீத பால பாஸ்கரா, தேசிய குடிமகனுக்கான விருது, ராஜீவ் காந்தி தேசிய விருது என பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். தமிழக அரசினால் ஆஸ்தான வித்வான் என்ற பட்டத்தையும் அவர் பெற்றுள்ளார்.

Advertisements

2 thoughts on “பிரபல இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீனிவாசன் 45 வயதில் மரணம்!”

  1. இசையுலகின் பேரிளப்பு. மைக்கல் ஜக்சனின் பின் என்னை மிக வாட்டிய மரணம்.
    தன் விரல் வித்தையால் என் துன்பங்களை மறக்கடித்தவர்.
    இவர் வாசிப்பில் லயித்து,சற்குரு தியாகராஜ சுவாமிகள் மறுபிறவியோ என நான் மகிழ்வேன்.
    இயமனுக்கு இசைபற்றித் தெரியாது.
    அவர் ஆத்மா அமைதியுறட்டும். அவர் குடும்பம் ஆறுதலடைய இறைவன் அருள் புரிய வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s