கருப்பர் நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறவர் எம்.பாலசுப்பிரமணியம். இந்தப் படத்தில் அகில், அருந்ததி நடிக்க நடராஜன் கோபி படத்தை இயக்கியுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு கால்பந்தாட்டத்தில் மிக விருப்பம். உலக அளவில் கால்பந்தாட்ட வீரனாக புகழ்பெற வேண்டும் என்பதே அவனது லட்சியம். இந்நிலையில் ஒரு கொலை வழக்கு அவனை ரவுடியாக மாற்றிவிடுகிறது. நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கும் கருப்பர் நகரம் பாலசுப்பிரமணியம், இந்த மாதம் 26 -ஆம் தேதி வெளியாக இருக்கும் மெட்ராஸ் படத்தின் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர்களில் கருப்பர் நகரம் படத்தின் காட்சிகள் அப்படியே இருப்பதாகவும், கதையும் ஒன்றுபோல் உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இதுவரை 3 கோடிக்கு மேல் கருப்பர் நகரம் படத்துக்கு செவளித்து உள்ளதாகவும், மெட்ராஸ் படத்தை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் எனவும் மனுவில் மேலும் கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை 22 -ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன் பதில் மனு அளிக்க மெட்ராஸ் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
மெட்ராஸ் படத்தில் கார்த்தி, கேத்ரின் தெரஸா நடித்துள்ளனர். அட்டகத்தி அட்டகத்தி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.