சினிமா

கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

Kamal Haasan Press Meet Stills (1)

மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பாக உருவாகி வரும் பாபநாசம் படத்தில் தற்போது கமல்ஹாசன் நடித்து வருகிறார். கடந்த திங்கள்கிழமை சென்னையில் நடந்த பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பார் எனக் கூறப்பட்டது. ஆனால் அவர் அந்த விழாவில் பங்கேற்கவில்லை. பாபநாசம்’ படத்தின் படப்பிடிப்புக்காக அவர் தென்காசியில் இருந்தார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று காலை அனுமதிக்கப்பட்டார். தொடர் படப்பிடிப்பும் உணவு ஒவ்வாமையும் அவரது உடல் நலக்குறைவுக்கு காரணங்கள் என பரிசோதனையில் தெரிய வந்தது. சோர்வு, வயிற்று வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தேவையான பரிசோதனைகளும் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s