இலக்கியம், நூல் அறிமுகம், புத்தக அறிமுகம், பெண் எழுத்தாளர்

நூல் அறிமுகம் – சித்திரம் பேசேல்

நூல் அறிமுகம்

சித்திரம் பேசேல்

ஆசிரியர்: மீனா

எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002
தொலைபேசி: 04259 226012
கைபேசி: 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

தமிழிலக்கியம் பயின்றவரான மீனா, தமிழ் இலக்கிய வெளியில் நம்பிக்கைக்குரிய வரவு. தமிழ் இலக்கியத்தில் இயங்கும் பெண்கள், கவிதையைத் தாண்டி எழுதுவதில்லை என்ற தட்டையான விமர்சனத்தை எதிர்கொள்ள மீனாவின் கட்டுரைகள் அடங்கிய இந்த நூலை பரிந்துரைக்கலாம். 2009ல் தீராநதியில் இவர் எழுதிய பாலியல் கலகம் நொறுங்கும் கலாசாரம் பலத்த விவாவத்தினை கிளப்பியது.
தீராநதி, உயிர் எழுத்து மற்றும் இணையப் பக்கங்களில் எழுதி வரவேற்பிற்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளான கட்டுரைகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. ‘சித்திரம் பேசேல்’ என்பது அவ்வையின் ஆத்திச்சூடி. பொய்மொழிகளை மெய்போலத் தோன்றும் வண்ணம் பேசாதே என்பது பொருள். கடந்த சில ஆண்டுகளில் எழுத வந்து தனக்கென ஒரு இடத்தை பெற்றிருக்கும் மீனாவின் இரண்டாவது நூல் இது. ‘மீடியா வாட்ச்’ எனும் ஊடக கவனிப்பினை முன்வைத்து உருவாகியுள்ள சில கட்டுரைகளும், முத்துப்பழனியின் ‘ராதிகா சாந்தவனம்’ எனும் காவியத்தின் அங்கமான சில கவிதைகளின் மொழிபெயர்ப்புகளும் தமிழுக்குப் புதியவை. வரலாற்றுத் திரு உருக்கள் மட்டுமல்ல எதிர்மறைப் பிம்பங்களும் கூட இங்கே எவ்வாறு தட்டையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பதை வ.வே.சுவை முன்வைத்து மீனா விவாதிப்பது இந்நூலின் இன்னொரு முக்கிய பங்களிப்பு.

எதிர் வெளியீடு இணையதளத்தில் இந்த நூலை வாங்கலாம். தமிழகத்துக்குள் நூல் வாங்குவோருக்கு கூரியர் செலவு இலவசமாக தருகிறார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s