விஷன் ஐ மீடியாஸ் நிறுவனம் சார்பில் டி.தினேஷ் கார்த்திக் தயாரிக்கும் படம் அரண்மனை. இப்படத்தை சுந்தர் சி. இயக்குவதோடு முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கவும் செய்துள்ளார். நாயகனாக வினய் நடித்திருக்கிறார். தவிர, ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, லட்சுமிராய் என மூன்று நாயகிகள். இவர்களுடன் சந்தானம், சரவணன், கோவைசரளா, மனோபாலா, காதல் தண்டபாணி, கோட்டா சீனிவாசராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என்று பலர் நடித்து உள்ளனர். பரத்வாஜ் இசையமைத்துள்ளார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுந்தர்.சி தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி முதன் முறையாக திகில் கலந்த காமெடி படத்தை இயக்கியிறுக்கிறார். படம் வரும் செப்-19ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதனிடையே அரண்மனை படம் தணிக்கைக் குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.