அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

குழந்தை இறப்பு விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை : புதிய மோட்டார் வாகன மசோதா

Traffic-rulesகுழந்தை இறப்புக்கு காரணமாகும் விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு ரூ.3 லட்சம் அபராதத்துடன், 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட “புதிய சாலை பாதுகாப்பு, போக்குவரத்து மசோதா-2014′ பல்வேறு தரப்பினரின் கருத்துகளை அறிந்து கொள்வதற்காக சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் சாலை விபத்துகள் நேரிடுகின்றன. இதில் 1.4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். பலி எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய மசோதாவில் சாலை விதிகளை மீறுவோர், விபத்துகளை ஏற்படுத்துவோருக்கு கடுமையான தண்டனை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒரு நபர், குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றத்தை முதல்முறையாகச் செய்தால், அவருக்கு ரூ.25 அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு குறையாமல் சிறைத் தண்டனையோ அல்லது இரண்டையும் சேர்த்து தண்டனையாக வழங்குவதுடன், 6 மாதகாலம் வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அதே குற்றத்தை அடுத்த 3 ஆண்டுகளில் அந்த நபர், 2ஆவது முறையாகச் செய்தால், ரூ.50,000 அபராதம் அல்லது ஓராண்டு சிறைத் தண்டனையோ அல்லது 2 தண்டனைகளுடன் சேர்த்து ஓராண்டு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். குழந்தை இறப்புக்கு காரணமாகும் விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, ரூ.3 லட்சம் அபராதத்துடன், 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

பள்ளி வாகனங்களை ஓட்டுவோர், மதுகுடித்தது கண்டுபிடிக்கப்பட்டால், ரூ.50,000 அபராதத்துடன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். அந்த ஓட்டுநரின் வயது 18லிருந்து 25 வரையிருந்தால், ஓட்டுநர் உரிமமும் உடனடியாக ரத்து செய்யப்படும். சாலைகளில் இருக்கும் சிக்னல்களை 3 முறை மீறுவோருக்கு ரூ.15,000 அபராதமும், ஒரு மாத காலத்துக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவோரின் உரிமம் ரத்து செய்யப்படும். பழுதடைந்த வாகனங்களை பயன்படுத்துவோருக்கு ரூ.1 லட்சம் அபராதம் அல்லது 6 மாதத்தில் இருந்து ஓராண்டு வரையான சிறைத் தண்டனை விதிக்கப்படும். அல்லது 2 தண்டனைகளும் சேர்த்து வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s