ஃபேஷன் ஸ்டோர்களில் அதிக விலைக்கு விற்கப்படும் histyle மணிமாலையை நீங்களே குறைந்த செலவில் செய்ய முடியும். ஃபேஷன் ஜுவல்லரி நுணுக்கம் தெரிய வேண்டும் என்று அவசியமில்லை. இதோ step by step வழிமுறை…
தேவையானவை: கம்பி இணைப்பான், பிளைன் செயின், தேவையான நிறங்களில் மணிகள், பீட் ஸ்பேசர்கள், கட்டர், பிளையர்இதுபோன்ற செயினை(மிகக் குறைந்த விலை இது) வாங்கி சரியான இடைவெளி விட்டு நடுவில் வெட்டுங்கள்.தேவையான அளவில் கம்பியை வெட்டி அதில் மணிகளை கோர்த்துக் கொள்ளுங்கள்.கம்பியின் ஒரு முனையில் இரண்டு பீட் ஸ்பேசர்கள் கோர்த்து அதில் செயினின் ஒரு முனையை நுழைத்து மீண்டும் அந்த கம்பியை பீட் ஸ்பேசர்களுக்குள் விட்டு இறுக்கமாக இணையுங்கள். இணைத்த பீட்களை பிளையர் கொண்டு அழுத்துங்கள். இப்போது கோர்த்த மணிமாலையின் ஒரு முனையை செயினுடன் இணைத்து விட்டோம். இதேபோல் அடுத்த பக்கத்தையும் இணையுங்கள்.இதோ தயாரான மணிமாலை இப்படி இருக்கும்!