நடிகர் என்பதோடு தயாரிப்பாளராக பாண்டிய நாடு படத்தின் மூலம் அறிமுகமானார் விஷால். படம் நன்றாக ஓடியதும். அடுத்து நான் சிகப்பு மனிதன், பூஜை படங்களை தயாரித்தார். பூஜை தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்நிலை தன் நண்பர் விஷ்ணு நடித்த ஜீவா படத்தை வாங்கியதன் மூலம் விநியோகிப்பாளராகவும் மாறினார். இப்போது வி மியூசிக் என்ற பெயரில் இசை வெளியீட்டு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் தான் நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆவதை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.