ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லிக்கும் நடிகை பிரியாவுக்கும் திருமணம் நிச்சயம் நடந்தது. இவர்கள் திருமணம் விரைவில் நடக்க உள்ளது. ஷங்கரிடம் துணை இயக்குநராக இருந்து ராஜா ராணி மூலம் இயக்குநரானவர் அட்லி. பிரியா சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சிங்கம் படத்தில் அனுஷ்காவின் தங்கையாகவும், நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தங்கையாகவும் நடித்துள்ளார்.