குழந்தை திருமணம் பாலியல் பலாத்காரத்தை விட மிகவும் மோசமான செயல். இச்செயலை சமூதாயத்தில் இருந்து முற்றிலும் அகற்ற வேண்டும் என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குழந்தை திருமணத்துக்கு எதிராக ஒரு பெற்றோர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் ஷிவானி சவுகான் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், வளர்ச்சியடைந்ததாக சொல்லப்படும் மாநிலங்களில் கூட குழந்தைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.