திருவனந்தபுரத்திலுள்ள ராஜ்பவனில் நடைபெறும் விழாவில், புதிய ஆளுநரான சதாசிவத்திற்கு கேரள உயர்நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி அசோக் பூஷண் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து கோவையில் இருந்து விமானத்தில் திருவனந்தபுரத்துக்கு சென்ற நீதிபதி சதாசிவத்துக்கு விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து முதலமைச்சர் உம்மன் சாண்டி, அமைச்சர்கள் , உயரதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர். முன்னதாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய-மாநில அரசுகளுக்கு இடையே நல்லுறவு நிலவ உதவும் வகையில் செயல்படப் போவதாகத் தெரிவித்தார். முன்னாள் தலைமை நீதிபதி ஒரு மாநிலத்தின் ஆளுநராவது இதுவே முதல் முறை.