அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலே தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அந்நாட்டைச் சேர்ந்த இன்னொரு பத்திரிகையாளர் ஸ்டீவன் சாட்லாஃப் என்பவரின் தலையை துண்டித்துள்ளது ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படை. அமெரிக்காவுக்கு 2வது தகவல் என பெயரிட்டு அந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்., இராக் பிரச்னையில் அமெரிக்க தலையிட்டதற்கான விலை இது’ என தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் பிடியில் இருக்கும் டேவிட் ஹெய்ன்ஸ் என்ற பிரிட்டனைச் சேர்ந்த பிணைக் கைதியை கொலை செய்யப்போவதாகவும் கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாதுகாக்க மேலும் 350 அமெரிக்க ராணுவப் படையினரை அனுப்ப அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டிருக்கிறார்.