இன்றைய செய்திகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தமிழ்நாடு

குடிகாரக் கணவனால் மனைவி தீக்குளித்து தற்கொலை

crime against women

மேடவாக்கம் அருகே வடக்குப்பட்டு அண்ணாமலை நகர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (30). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மஞ்சுளா (25). இத் தம்பதியின் மகன் சஞ்சய் (3). மஞ்சுளா அந்தப் பகுதியில் வீட்டுவேலை செய்து வந்தார். மாரிமுத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், மாரிமுத்து திங்கள்கிழமை இரவு அதிகமாக மது அருந்திவிட்டு மஞ்சுளாவிடம் தகராறு செய்திருக்கிறார். இதனால் விரக்தியடைந்த மஞ்சுளா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாரிமுத்து, மஞ்சுளாவைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார். அதற்குள் மஞ்சுளா, மாரிமுத்துவையும், தனது மகன் சஞ்சய்யையும் கட்டிப்பிடித்துக் கொண்டதாக தெரிகிறது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த 3 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மஞ்சுளா இறந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து செவ்வாய்க்கிழமை இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இவர்களின் குழந்தை சஞ்சய் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை தடுப்பு உதவி தொலைபேசி எண்: 044-24640050, 044-24640060

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s