ஹேர் க்ளிப் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்தேவையானவை: பிளைன் ஹேர் க்ளிப், இரண்டு வெவேறு நிறங்களில் கலர் க்ளே, பல் குத்தி குச்சிகள், பசை…ஆரஞ்சு நிற க்ளேயில் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் மேடுள்ள பக்கமாக வைத்து உருண்டையாக உருட்டுங்கள். உருட்டியதை ஹேர் க்ளிப்பின் நடுவே பசை போட்டு ஒட்டுங்கள். அடுத்து இதே அளவில் 8 சிறு உருணடைகளை எடுத்துக்க் கொள்ளுங்கள்.உருட்டிய ருண்டையின் ஒரு பக்கமாக உருட்டினால் இப்படி மழைத்துளி அல்லது பூவிதழ் போன்ற வடிவம் கிடைக்கும். அதை இப்படி ஒட்டவும்.ஒரு டூத் பிக் குச்சியால் ஒட்டிய இதழ்களின் மேல் இப்படி அழுத்தம் கொடுக்கவும்.இதேபோல அனைத்து இதழ்களையும் செய்து ஒட்டவும்.இறுதியாக பச்சை நிற க்ளேயில் இரண்டு இரண்டு உருண்டைகள் உருட்டி அவற்றை இதழ்போல செய்து பூவின் ஒரு புறம் ஒட்டவும். பிறகு குச்சியால் இதழில் இருக்கும் நரம்புகள் போல அழுத்தம் தரவும்.
இதேபோல இரண்டு பக்கமும் இலைகள் ஒட்டினால் க்ளிப் தயார்!