வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதை திட்டமிட்டு தவிர்க்கும் நிறுவனங்கள் பங்குசந்தை மூலம் இனி முதலீடு திரட்ட அனுமதிக்கப்படாது என செபியின் தலைவர் யூ கே சின்ஹா கூறியுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரையின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதேபோல தற்போது விசாரித்து வரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.