மனித வாழ்வில் மலர்களின் பங்கு அதிகமானது. மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காரணியாக மலர்களை பயன்படுத்தும் வழக்கம் ஆதிகாலம் முதல் உள்ளது. வளர்ந்து வரும் தற்போதிய நாகரிக வாழ்வில் மலர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மலர்களை ஒட்டிய சிறுதொழில்களும் தோன்றியுள்ளன. கொய் மலர்களை பயன்படுத்தி பூச்சண்டு தயாரித்தல், மேசை அலங்காரம் மற்றும் அரங்குகளின் அலங்காரம் செய்தல், உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல், மாலை கட்டுதல், கொண்டை சரம் கட்டுதல் போன்றவை அவற்றில் சில… இவற்றை தொழில் ரீதியாக கற்றுத்தருகிறது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் தகவல் மற்றும் பயிற்சி மையம். குறைந்த கட்டணத்தில் கற்றுத்தருவதோடு தொழில் வாய்ப்புகளுக்கான வாய்ப்புகளுக்கும் வழிகாட்டுகிறார்கள். இப்பயிற்சியானது வீட்லிருப்போர், மாணவர்கள், இளைஞர்கள், சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விருப்பமுள்ள அனைவருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
பயிற்சி நாள்: 03.09.2014 (புதன்)
பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
பயிற்சி கட்டணம் : ரூ. 400. மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு ரூ. 300ம் மாணவர்களுக்கும் ரூ.200ம் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபெசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்ய வேண்டும்.
பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையெடு, மதிய உணவுடன் சான்றிதழும் வழங்கப்படும்.
தொடர்பு முகவரி
பேராசிரியர் மற்றும் தலைவர்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தகவல் மற்றும் பயிற்சி மையம்
எண்: U-30 10வது தெரு (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்)
அண்ணாநகர்
சென்னை – 600 040.
தொலைபெசி எண் – 044-26263484
சிறந்த பகிர்வு
தொடருங்கள்