அரசியல்வாதிகளின் வாரிசுகள் பணம் மற்றும் செல்வாக்கை காரணம் காட்சி பிரபலமாக உள்ள நடிகைகளை ஏமாற்றுவது வாடிக்கியாக உள்ளது. அந்த காலத்து மைனர்களைப் போல இந்தக் காலத்தில் அரசியல் வாரிசுகள் பெண்களை ஏமாற்றுவதை அந்தஸ்துக்குரிய விஷயமாக பார்க்கிறார்கள். அதை பெருமையாக நினைக்கிறார்கள். சமீபத்திய உதாரணம்… ரயில்வே அமைச்சரின் மகன் சதானந்தாவின் மகன் கார்த்திக். திருமணம் செய்து ஏமாற்றியதாக சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட நடிகை மைத்ரி குற்றம்சாட்டியுள்ளார்.
மங்களூரைச் சேர்ந்த மைத்ரி கவுடா, கடந்த ஆண்டு கன்னட நடிகர் உபேந்திரா நடித்த டோபிவாலா என்ற கன்னட படத்தில் நடிகையாக அறிமுகமானார். கடந்த மே 8 ஆம் தேதி மங்களூருவில் கார்த்திக்கை சந்தித்ததாகவும் பிறகு இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர், ஜூன் 5 ஆம் தேதி மங்களூருவில் உள்ள கார்த்திக்கின் வீட்டில் வைத்து அவர் தன்னை திருமணம் செய்து கொண்டதாக மைத்ரி கூறியுள்ளார். பிறகு இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாகவும் நடிகை மைத்ரி தெரிவித்தார். தங்களைப் பற்றி கார்த்திக்கின் தாய்க்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்த குற்றச்சாட்டை சதானந்த கவுடாவும், அவரது மகனும் மறுத்துள்ளனர். தனது தந்தை சதானந்தாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கார்த்திக் தெரிவித்தார். இதுவும் வழக்கமான பாணி தப்பித்தல்தான்!