
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விரைவுப் பேருந்து செவ்வாய்க்கிழமை இரவு 11 மணியளவில் சுமார் 41 பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை கும்பகோணத்தைச் சேர்ந்த எபினேசர் (55) ஓட்டினார். நடத்துனராக சேகர் (58) என்பவர் இருந்தார்.
இந்தப் பேருந்து பண்ருட்டி அருகே உள்ள பனிக்கன்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பெரிய பள்ளத்தில் பாய்ந்தது. அப்போது, சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் கிளை ஒன்று, பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்ததால், அதில் சிக்கிக் கொண்ட பேருந்து பள்ளத்தில் விழாமல் தொங்கியபடி நின்றது.
இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. பேருந்தில் இருந்த 41 பேரின் உயிரையும், சாலையோரம் இருந்த புளியமரம்தான் காப்பாற்றியுள்ளது. அந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால் ஏராளமான உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என்று விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்