கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், வீடு பராமரிப்பு

வீட்டை அலங்கரிக்க சீன விசிறி: step by step படங்களுடன் செய்முறை

 

வீட்டின் வாசலில் அல்லது வரவேற்பறையில் வைக்க இந்த சீன விசிறி மிக அழகாக இருக்கும். குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களின் போது அல்லது பள்ளி விடுமுறை நாட்களில் இது போல செய்யச் சொல்லி அவர்களின் கற்பனைத் திறனை தூண்டலாம். செலவு அதிகம் பிடிக்காது. வீடும் அழகாகும்! செய்து பாருங்கள்…சீன விசிறி செய்முறையை விடியோவில் காண..

chinese fan (6)
சீன விசிறி செய்யக் கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்
DSCN0238
தேவையானவை: இரண்டு வெவ்வேறு நிறங்களில் பேப்பர், ஐஸ்க்ரீம் குச்சிகள் மூன்று, அலங்கரிக்க செயற்கை மலர்கள், ஃபேப்ரிக் க்ளூ, கத்தரிக்கோல், ஸ்கேல்
chinese fan (8)
விசிறியின் அளவுக்கு ஏற்ப ஒரு நிறத்தில் 1 சதுர துண்டையும், மற்றொரு நிறத்தில் ஒரு சதுர துண்டையும் வெட்டுங்கள். வெட்டிய துண்டுகளை சேலை மடிப்புகளாக இதோ இப்படி மடித்துக் கொள்ளுங்கள். இப்படி மடித்து அதை சரிசமமாக மடித்தால் விசிறி கிடைக்கும். இதுபோல இன்னொரு பேப்பரிலும் விசிறி செய்து அதனுள் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் விசிறியை வைத்து பசையால் ஒட்டுங்கள்.

 

chinese fan (9)
ஏதாவது ஒரு நிற பேப்பரில் ஒரு நீளமான துண்டை வெட்டி அதை மடித்து ஒரு வளையம் போல ஆக்கி ஒட்டுங்கள். இதேபோல இன்னொன்றையும் செய்யுங்கள்.
chinese fan (10)
வெட்டி, ஒட்டிய வளையங்களுக்குள் குச்சிகளை இப்படி நுழைத்து ஒரு இன்ச் இடைவெளி விட்டு இப்படி ஒட்டுங்கள்.
chinese fan (12)
ஒட்டி வைத்திருக்கும் விசிறியின் இருபுறமும் ஒரு இன்ச் இடைவெளி விட்டு, இந்த குச்சிகளை ஒட்ட வேண்டும்.
chinese fan (2)
குச்சியை நுழைத்து விசிறியை விரித்தால் இப்படி இருக்கும். இரண்டு குச்சிகளுக்கும் நடுவே இருக்கும் வளையத்துக்கு மீதமிருக்கும் ஒரு குச்சியையும் நுழைத்தால் விசிறி அப்படியே நிற்கும். இதன்மேல் செயற்கை பூக்களை ஒட்டி அலங்காரம் செய்யுங்கள்.
chinese fan (3)
விருப்பமுள்ளவர்கள் ஒரு கையிறில் மணிகளைக் கோர்த்து குச்சியில் இணைத்து தொங்கவும் விடலாம்.

 

Advertisements

1 thought on “வீட்டை அலங்கரிக்க சீன விசிறி: step by step படங்களுடன் செய்முறை”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s