சினிமா

நட்புக்கு மரியாதை கொடுத்தார் சூரி: புகழும் கத்துக்குட்டி படக்குழு

Soori Ad

நடிகர் சூரிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளது கத்துக்குட்டி படக்குழு. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘நரேன் – சூரி கூட்டணியில் பக்கா காமெடி படமாக உருவெடுத்து வரும் ‘கத்துக்குட்டி’ இருவருக்குமே மிகப் பெரிய அளவில் பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இந்த நேரத்தில் அண்ணன் சூரி அவர்கள் ‘கத்துக்குட்டி‘ படத்துக்காகச் செய்த பேருதவி நினைவுகூறத்தக்கது. ‘கத்துக்குட்டி ஷூட்டிங்கிற்காக நாம் சூரி அண்ணனின் கால்ஷூட் கேட்டபோது, அவருடைய டைரி நிரம்பி வழிந்த நேரம். ‘கத்துக்குட்டி’ படத்தின் கதைக்கும் நம் நட்புக்கும் மட்டுமே தலைவணங்கி மிக பிஸியான நேரத்தில் நமக்காக நாட்கள் ஒதுக்கினார் சூரி. நாம் முதலில் அவரிடம் கேட்டது 15 நாட்கள் மட்டுமே. படத்தில் ஹீரோவுக்கு நிகரான பாத்திரம் அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு படங்களில் மிகுந்த பரபரப்பாக நடித்துவந்த அண்ணன் சூரியை அதற்கு மேல் கால்ஷூட் கேட்டு தொந்தரவு செய்துவிடக் கூடாது என எண்ணியிருந்தோம் நாம். ஆனால், நம் படத்தின் ஷூட்டிங் நல்லபடி நடைபெற வேண்டும் என்பதற்காக, தானே வலிய முன்வந்து கூடுதலாக நாட்களை ஒதுக்கிக் கொடுத்து சூரி அண்ணன் செய்த உதவி காலத்துக்கும் மறக்க முடியாதது.

சூரி அண்ணன் முன்வந்து ஆர்வம் காட்டுகிற அளவுக்கு நம் படம் ஒன்றும் பெரிய அளவிலான ஸ்டார்கள் நடிக்கும் படம் அல்ல. பிரபலமான இயக்குநர் இயக்குகிற படம் அல்ல. பிரமாண்ட நிறுவனம் தயாரிக்கிற படம் அல்ல. முழுக்க முழுக்க புதுமுக ஆட்களாலேயே எடுக்கப்பட்டு வரும் நம் படத்துக்காக சூரி அண்ணன் இவ்வளவு பெரிய பங்களிப்பைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நல்ல கதைகளுக்கும் காட்சிகளுக்கும் அவர் எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார் என்பதற்கு நம் ‘கத்துக்குட்டி’ படத்துக்கு அவர் காட்டும் அக்கறையே சாட்சி.
இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்த நேரத்தில் மிக பிஸியாக இருந்த சூரி அண்ணன் அப்போதும் சில முக்கியப் படங்களின் கால்ஷூட்டை மாற்றிக் கொடுத்துவிட்டு நமக்காக நாள் ஒதுக்கினார். ஆவடியில் உள்ள ஒரு மதுபானக் கடையில் லைவ்வாக ஷூட்டிங் நடத்த நமது இயக்குநர் திட்டமிட்டபோது, அண்ணன் சூரியை வைத்து பாருக்குள் ஷூட்டிங் நடத்துவது சிரமம். அதனால், செட் போட்டு படமாக்கலாம் எனப் பலரும் சொன்னார்கள். ஆனால், இயக்குநரின் விருப்பத்தைத் தட்டாமல், ஒரிஜினல் பாரில் அமர்ந்து, குடிமகன்களின் அநியாய அலப்பறைகளைப் பொறுத்துக்கொண்டு ஒரு நாள் முழுக்க அங்கேயே நடித்துக் கொடுத்தார் சூரி. இன்றைய காலகட்டத்தில் வளரும் நடிகர்கள்கூட இத்தகைய ரிஸ்க்கை எடுக்கத் தயங்குவார்கள்.

வெறுமனே ஷூட்டிங்கில் கலந்துகொள்வது மட்டும் அல்லாமல், நேரம் கிடைக்கிற போதெல்லாம் படத்தின் வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டே இருப்பார் சூரி. மிகப் பெரிய நிறுவனங்கள் பெரிய அளவு சம்பளம் பேசி அவரைத் தூக்கிக் கொண்டு போகக் காத்திருக்கும் நிலையில், மிக குறைந்த சம்பளத்துக்கு அதிக நாட்களை நமக்கு ஒதுக்கிக் கொடுத்து சூரி அண்ணன் செய்த உதவி காலத்துக்கும் சொல்லத்தக்கது.

ஷூட்டிங் ஸ்பாட்டிலும் எவ்வித ஆடம்பர வசதிகளை எதிர்பார்க்காமல் மிகச் சாதாரணமாக நடந்துகொண்ட அவருடைய எளிமையும், கொடுக்கிற வசனத்தைப் பேசிவிட்டுப் போகாமல் ஸ்பாட்டிலேயே இயக்குநருடன் நன்கு கலந்து ஆலோசித்து தன் மனதில் தோன்றும் கருத்துக்களையும் சொல்லி, அவர் மெருகேற்றிய விதமும் கைகுலுக்கிப் பாராட்டத்தக்கது.
2014-ல் நான் எதிர்பார்க்கும் மிக முக்கியப் படங்களில் குறிப்பிடத்தக்கது கத்துக்குட்டி…” என சூரி அண்ணன் சொன்ன வார்த்தைகள் நம் கத்துக்குட்டி குழுவுக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவம். சூரி அண்ணனின் நம்பிக்கையை நிஜமாக்கும் விதமாக மிக அற்புதமாக தயாராகி வருகிறது கத்துக்குட்டி படம்.

இன்று (27.8.2014) பிறந்த நாள் கொண்டாடும் நகைச்சுவை சூறாவளி சூரி பல்லாண்டுகள் வாழவும் சந்திரபாபு, கலைவாணர், நாகேஷ் வரிசையில் காலத்தை வென்ற காமெடி நாயகராக கொடிகட்டி ஆளவும் வாழ்த்துகிறது கத்துக்குட்டி டீம்!’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.